புதுமை என்ற வார்த்தைக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. எல்லா காலத்திலும் எல்லாத் துறைகளிலும் புதுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் 1950-60-களில் இருந்த தகவல் தொழில் நுட்பம், வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி வீணை S. பாலசந்தர் முற்றிலும் புதுமையாக பல முயற்சிகள் செய்துள்ளார்.
அதில் :பொம்மை" திரைப்படமும் ஒன்று.
இந்தப் படத்தில் கவனிக்கப்படவேண்டிய சில முக்கியமான விஷயங்கள்.
படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலே போடாமல் படத்தின் முடிவில் இதில் பங்கேற்ற நடிக, நடிகையர், மற்றும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் திரையில் அறிமுகப் படுத்தியிருப்பது 1964-ல் மிகவும் புதுமையான ஒன்றாகும்.
நாயகன் நாயகி என்று யாருக்கும் முக்கியத்துவம் இல்லாமல் ஒரு பொம்மையை வைத்துப் பல கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையில் சுவாரஸ்யம் தரமுடியும் என்று யோசிக்க வைத்த படம்.
நாயகன் நாயகி என்று யாருக்கும் முக்கியத்துவம் இல்லாமல் ஒரு பொம்மையை வைத்துப் பல கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையில் சுவாரஸ்யம் தரமுடியும் என்று யோசிக்க வைத்த படம்.
இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிக்க "நீயும் பொம்மை நானும் பொம்மை"என்ற பாடல் K.J.ஜேசுதாஸ் அவர்கள் தமிழில் முதல் முதலாக பாடிய பாடலாகும்.

கதைச்சுருக்கம்
சென்னையில் ஒரு பெரிய கம்பெனியின் முதலாளி சோமசுந்தரம்(வீணை S. பாலசந்தர்). இவரது வாழ்க்கையில் முன்பு ஒருமுறை இவர் உயிரைக் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக முன்பின் தெரியாத ஆளான ஜெகதீஷுக்கு(V.S.ராகவன்) தன் கம்பெனியின் சொத்துக்களில் தனக்கு சமமான அதிகாரம் கொடுத்து வைத்திருக்கிறார் சோமசுந்தரம். ஆனால் ஜெகதீஷ் கடந்தகாலத்தில் ஒரு கொலைகாரன் என்று ஒரு சந்தேகம் அவருக்கு வரவே, அதை ஊர்ஜிதப் படுத்த சிங்கப்பூருக்கு கிளம்புகிறார். இதையறிந்து சிங்கப்பூரிலேயே வைத்துக் கொலை செய்யத் திட்டமிட்ட ஜெகதீஷ், அந்தத் திட்டத்திற்கு சொத்தின்மேல் ஆசை காட்டி, அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கும் சோமசுந்தரத்தின் உறவினர்களையே பயன்படுத்துகிறான். அவர்களில் ஒருவனான பிரபாகர் ஒரு வெடிகுண்டு வைக்கப்பட்ட பொம்மையைத் தயார் செய்கிறான். இவர்களுக்கு நடுவில் ஆனந்தன் என்ற மனித்தன்மை மிக்க ஒரு சோமசுந்தரத்தின் விசுவாசியும் இருக்கிறான். கொலைத் திட்டத்தை அறிந்த பிரபாகரின் தங்கை மல்லிகா(L.விஜயலஷ்மி) அவனைத் தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போகிறது.
பொம்மையை
சோமசுந்தரத்தின் கையில் கொடுக்கப்போகும் நேரத்தில் அந்த பொம்மை தவறுதலாக அவர்கள் வந்த
டாக்ஸியில் சென்றுவிட, அந்த டாக்ஸியில் அடுத்ததாகப் பயணம் செய்யும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினரின்
கையில் அது கிடைக்கிறது. அதை அவர்கள் டாக்ஸி டிரைவருக்கு(கோபாலகிருஷ்ணன்) தெரியாமல் தங்கள் வீட்டுக்கு
எடுத்துச் சென்று தங்கள் குழந்தைக்கு கொடுத்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில்
பொம்மையில் வெடிகுண்டு இருந்ததும், அது தவறி வேறு எங்கோ சென்று விட்டதையும், ஆனந்தன்
அறிகிறான். ஆனந்தனும் மல்லிகாவும் பொம்மையை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இதற்கிடையில்
பொம்மையை எடுத்துக் கொண்டு போன தம்பதியினர் மனம் மாறி பொம்மையை டாக்ஸி டிரைவரிடமே திருப்பிச்
சேர்க்க, அந்த நேரத்தில் தன் தாய்க்கு மருந்து வாங்கப் பணமில்லாததால் டாக்ஸி டிரைவர்
அந்த பொம்மையை தனக்குத் தெரிந்த ஒரு பெரிய குடும்பத்தினரிடம் விற்று தன் தேவையைத் தீர்த்துக்
கொள்கிறான்.
சோமசுந்தரத்தின்
ஆட்கள் டாக்ஸியைத் தேடி அலைந்தும் கிடைக்காமல், சோமசுந்தரத்தைக் கொல்ல வேறு திட்டம்
போடுகிறார்கள். கூடவே ஆனந்தனைப் பிடித்து அடைத்துவைரும்படி ஜெகதீஷ் சொல்கிறான். இதற்கிடையில்
பணக்காரக் குடும்பத்திடமிருந்து பொம்மையை ஒரு சிறுவன் திருடிச் செல்ல, அவனிடமிருந்து
ஒரு நாயின் மூலமாக ஒரு பார்வையற்ற பிச்சைக் காரனிடம் செல்கிறது. அதை எடுத்துக் கொண்டு
செல்லும்போது பிச்சைக்காரன் விபத்தில் இறந்துவிடுகிறான்,
ஒரு
நிலையில் ஆனந்தனும், மல்லிகாவும் டாக்ஸி டிரைவரைக் கண்டுபிடிக்கிறார்கள், அதன் ஆபத்தை
அறிந்ததும் அவன் தயக்கத்துடனும், குற்ற உணர்வுடனும் பொம்மையை விற்றுவிட்டதை ஒப்புக்
கொள்ள, மூவரும் பொம்மையைத் திருடிச் சென்ற சிறுவனைத் தேடிச் செல்கிறார்கள்.
சிறுவன்
பிச்சைக்காரன் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்ல, அவன் இறந்தது தெரிகிறது. ஆனால்
அருகில் குப்பைத் தொட்டியில் கிடந்த பொம்மையை யாரும் கவனிக்கவில்லை. அதற்குள் ஆனந்தனை
ஜெகதீஷின் ஆட்கள் இழுத்துச் செல்கிறார்கள். கடைசியாக பொம்மையை கவனித்த சிறுவன் அதை
எடுத்துப் பார்க்கும்போது, போலீஸால் பிடிபடுகிறான். இதற்கிடையில் மல்லிகாவும் ஜெகதீஷிடம்
பிடிபட்டு அடைத்து வைக்கப்படுகிறாள்.
அதேநேரம்
சிங்கப்பூர் விமானம் பாதிவழியில் பிரச்சனை ஆனதால், மீண்டும் திரும்புகிறார் சோமசுந்தரம்.
அவரை மீண்டும் போகச் சொல்லி ஜெகதீஷ் வற்புறுத்த, அவன் சொல்லை மதித்து சோமசுந்தரம் சிங்கப்பூர்
செல்ல முடிவு செய்கிறார். இந்தமுறை அவர் செல்லும்போது இன்னொரு வெடிகுண்டைக் கொடுத்தனுப்பி
அவரைக் கொல்ல முடிவு செய்து ஒரு புது பொம்மை வாங்கிவரச் சொல்லி அவர்களின் ஆட்களில்
ஒருவனை அனுப்புகிறார்கள்.
இதற்கிடையில்
பொம்மையைத் திருடிய சிறுவன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட ஒரு பொம்மைக் கடைக்காரர்,
வெடிகுண்டு வைக்கப்பட்ட பொம்மையைத் தனது என்று வாங்கிக் கொண்டு போகிறார். பொம்மை வாங்கப்போன
ஜெகதீஷின் ஆள் அந்த பொம்மைக் கடைக்கு வந்து அதே பொம்மையை வாங்கிப் போகிறான். ஆனால்
அவன் வருவதற்குள் பிரபாகர் வேறொரு பொம்மைக்குள் வெடிகுண்டைத் தயார் செய்கிறான். அதை
எடுத்துச் சென்று ஏர்ப்போர்ட்டில் இருக்கும் சோமசுந்தரத்திடம் கொடுப்பதற்காகப் புறப்படும்போது
பொம்மை வாங்கிவரச் சென்றவன் பொம்மையுடன் வர அவனையும் காரில் அழைத்துச் செல்கிறார்கள்.
அவர்கள் திட்டப்படி சோமசுந்தரத்திடம் பொம்மையை சேர்த்துவிட்டுப் புறப்படுகிறார்கள்.
இந்நிலையில்
மல்லிகா தப்பித்து போலீஸுடன் ஜெகதீஷ் மற்றும் அவன் ஆட்களைப் பின் தொடர, அதற்குள் அவர்கள்
கையில் இருந்த பழைய வெடிகுண்டு பொம்மை யாருக்கும் ஆபத்து இல்லாமல் சாலையில் வெடிக்கிறது.
அதுவரை, வெடிகுண்டு வைக்கப்பட்ட இங்கு வெடிக்குமா, அங்கு வெடிக்குமா என்று திகிலை எல்லா காட்சிகளிலும் கொடுத்திருப்பது திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
இறுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வேறு பொம்மையுடன் சிங்கப்பூர் போகவிருந்த சோமசுந்தரத்தை அவரைத் தேடி வந்த டாக்ஸி டிரைவர் தடுத்து நிறுத்துகிறான். அங்கு வந்த போலீஸ் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்ட பொம்மையை கைப்பற்றி அவரையும் நேரவிருந்த பேராபத்தை தடுக்கிறார்கள்.
இறுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வேறு பொம்மையுடன் சிங்கப்பூர் போகவிருந்த சோமசுந்தரத்தை அவரைத் தேடி வந்த டாக்ஸி டிரைவர் தடுத்து நிறுத்துகிறான். அங்கு வந்த போலீஸ் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்ட பொம்மையை கைப்பற்றி அவரையும் நேரவிருந்த பேராபத்தை தடுக்கிறார்கள்.
இந்தப் படத்தை
YOUTUBE-ல் காண CLICK பொம்மை FULL FILM
நடிகர்கள்
வீணை S. பாலசந்தர்
L.விஜயலஷ்மி
ரமேஷ்
V.S.ராகவன்
கோபாலகிருஷ்ணன்
தொழில்நுட்பக் கலைஞர்கள்
வசனம்-வே. லஷ்மணன்
ஒளிப்பதிவு-பிரகாஷ்
பாடல்கள்-வித்வான் லஷ்மணன்
படத்தொகுப்பு-K. கோவிந்தசாமி
கதை, இசை, தயாரிப்பு, இயக்கம்-வீணை S. பாலசந்தர்
இவரது மற்ற படங்களையும் விவரிக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும்.
ReplyDeleteNice Blog .....Latest Tami cinemal News...
ReplyDelete