Tamil movie
Some unfound pearls are still in indian cinema. I am just trying to find them out to make a jewel. The great pleasure is giving pleasure. J.RAJESH KUMAR.
Tuesday, 30 November 2021
Saturday, 23 February 2013
BOMMAI - 1964
புதுமை என்ற வார்த்தைக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. எல்லா காலத்திலும் எல்லாத் துறைகளிலும் புதுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் 1950-60-களில் இருந்த தகவல் தொழில் நுட்பம், வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி வீணை S. பாலசந்தர் முற்றிலும் புதுமையாக பல முயற்சிகள் செய்துள்ளார்.
அதில் :பொம்மை" திரைப்படமும் ஒன்று.
இந்தப் படத்தில் கவனிக்கப்படவேண்டிய சில முக்கியமான விஷயங்கள்.
படத்தின் ஆரம்பத்தில் டைட்டிலே போடாமல் படத்தின் முடிவில் இதில் பங்கேற்ற நடிக, நடிகையர், மற்றும் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் திரையில் அறிமுகப் படுத்தியிருப்பது 1964-ல் மிகவும் புதுமையான ஒன்றாகும்.
நாயகன் நாயகி என்று யாருக்கும் முக்கியத்துவம் இல்லாமல் ஒரு பொம்மையை வைத்துப் பல கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையில் சுவாரஸ்யம் தரமுடியும் என்று யோசிக்க வைத்த படம்.
நாயகன் நாயகி என்று யாருக்கும் முக்கியத்துவம் இல்லாமல் ஒரு பொம்மையை வைத்துப் பல கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையில் சுவாரஸ்யம் தரமுடியும் என்று யோசிக்க வைத்த படம்.
இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிக்க "நீயும் பொம்மை நானும் பொம்மை"என்ற பாடல் K.J.ஜேசுதாஸ் அவர்கள் தமிழில் முதல் முதலாக பாடிய பாடலாகும்.

கதைச்சுருக்கம்
சென்னையில் ஒரு பெரிய கம்பெனியின் முதலாளி சோமசுந்தரம்(வீணை S. பாலசந்தர்). இவரது வாழ்க்கையில் முன்பு ஒருமுறை இவர் உயிரைக் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக முன்பின் தெரியாத ஆளான ஜெகதீஷுக்கு(V.S.ராகவன்) தன் கம்பெனியின் சொத்துக்களில் தனக்கு சமமான அதிகாரம் கொடுத்து வைத்திருக்கிறார் சோமசுந்தரம். ஆனால் ஜெகதீஷ் கடந்தகாலத்தில் ஒரு கொலைகாரன் என்று ஒரு சந்தேகம் அவருக்கு வரவே, அதை ஊர்ஜிதப் படுத்த சிங்கப்பூருக்கு கிளம்புகிறார். இதையறிந்து சிங்கப்பூரிலேயே வைத்துக் கொலை செய்யத் திட்டமிட்ட ஜெகதீஷ், அந்தத் திட்டத்திற்கு சொத்தின்மேல் ஆசை காட்டி, அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கும் சோமசுந்தரத்தின் உறவினர்களையே பயன்படுத்துகிறான். அவர்களில் ஒருவனான பிரபாகர் ஒரு வெடிகுண்டு வைக்கப்பட்ட பொம்மையைத் தயார் செய்கிறான். இவர்களுக்கு நடுவில் ஆனந்தன் என்ற மனித்தன்மை மிக்க ஒரு சோமசுந்தரத்தின் விசுவாசியும் இருக்கிறான். கொலைத் திட்டத்தை அறிந்த பிரபாகரின் தங்கை மல்லிகா(L.விஜயலஷ்மி) அவனைத் தடுக்க முயற்சி செய்தும் முடியாமல் போகிறது.
பொம்மையை
சோமசுந்தரத்தின் கையில் கொடுக்கப்போகும் நேரத்தில் அந்த பொம்மை தவறுதலாக அவர்கள் வந்த
டாக்ஸியில் சென்றுவிட, அந்த டாக்ஸியில் அடுத்ததாகப் பயணம் செய்யும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினரின்
கையில் அது கிடைக்கிறது. அதை அவர்கள் டாக்ஸி டிரைவருக்கு(கோபாலகிருஷ்ணன்) தெரியாமல் தங்கள் வீட்டுக்கு
எடுத்துச் சென்று தங்கள் குழந்தைக்கு கொடுத்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில்
பொம்மையில் வெடிகுண்டு இருந்ததும், அது தவறி வேறு எங்கோ சென்று விட்டதையும், ஆனந்தன்
அறிகிறான். ஆனந்தனும் மல்லிகாவும் பொம்மையை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இதற்கிடையில்
பொம்மையை எடுத்துக் கொண்டு போன தம்பதியினர் மனம் மாறி பொம்மையை டாக்ஸி டிரைவரிடமே திருப்பிச்
சேர்க்க, அந்த நேரத்தில் தன் தாய்க்கு மருந்து வாங்கப் பணமில்லாததால் டாக்ஸி டிரைவர்
அந்த பொம்மையை தனக்குத் தெரிந்த ஒரு பெரிய குடும்பத்தினரிடம் விற்று தன் தேவையைத் தீர்த்துக்
கொள்கிறான்.
சோமசுந்தரத்தின்
ஆட்கள் டாக்ஸியைத் தேடி அலைந்தும் கிடைக்காமல், சோமசுந்தரத்தைக் கொல்ல வேறு திட்டம்
போடுகிறார்கள். கூடவே ஆனந்தனைப் பிடித்து அடைத்துவைரும்படி ஜெகதீஷ் சொல்கிறான். இதற்கிடையில்
பணக்காரக் குடும்பத்திடமிருந்து பொம்மையை ஒரு சிறுவன் திருடிச் செல்ல, அவனிடமிருந்து
ஒரு நாயின் மூலமாக ஒரு பார்வையற்ற பிச்சைக் காரனிடம் செல்கிறது. அதை எடுத்துக் கொண்டு
செல்லும்போது பிச்சைக்காரன் விபத்தில் இறந்துவிடுகிறான்,
ஒரு
நிலையில் ஆனந்தனும், மல்லிகாவும் டாக்ஸி டிரைவரைக் கண்டுபிடிக்கிறார்கள், அதன் ஆபத்தை
அறிந்ததும் அவன் தயக்கத்துடனும், குற்ற உணர்வுடனும் பொம்மையை விற்றுவிட்டதை ஒப்புக்
கொள்ள, மூவரும் பொம்மையைத் திருடிச் சென்ற சிறுவனைத் தேடிச் செல்கிறார்கள்.
சிறுவன்
பிச்சைக்காரன் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்ல, அவன் இறந்தது தெரிகிறது. ஆனால்
அருகில் குப்பைத் தொட்டியில் கிடந்த பொம்மையை யாரும் கவனிக்கவில்லை. அதற்குள் ஆனந்தனை
ஜெகதீஷின் ஆட்கள் இழுத்துச் செல்கிறார்கள். கடைசியாக பொம்மையை கவனித்த சிறுவன் அதை
எடுத்துப் பார்க்கும்போது, போலீஸால் பிடிபடுகிறான். இதற்கிடையில் மல்லிகாவும் ஜெகதீஷிடம்
பிடிபட்டு அடைத்து வைக்கப்படுகிறாள்.
அதேநேரம்
சிங்கப்பூர் விமானம் பாதிவழியில் பிரச்சனை ஆனதால், மீண்டும் திரும்புகிறார் சோமசுந்தரம்.
அவரை மீண்டும் போகச் சொல்லி ஜெகதீஷ் வற்புறுத்த, அவன் சொல்லை மதித்து சோமசுந்தரம் சிங்கப்பூர்
செல்ல முடிவு செய்கிறார். இந்தமுறை அவர் செல்லும்போது இன்னொரு வெடிகுண்டைக் கொடுத்தனுப்பி
அவரைக் கொல்ல முடிவு செய்து ஒரு புது பொம்மை வாங்கிவரச் சொல்லி அவர்களின் ஆட்களில்
ஒருவனை அனுப்புகிறார்கள்.
இதற்கிடையில்
பொம்மையைத் திருடிய சிறுவன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட ஒரு பொம்மைக் கடைக்காரர்,
வெடிகுண்டு வைக்கப்பட்ட பொம்மையைத் தனது என்று வாங்கிக் கொண்டு போகிறார். பொம்மை வாங்கப்போன
ஜெகதீஷின் ஆள் அந்த பொம்மைக் கடைக்கு வந்து அதே பொம்மையை வாங்கிப் போகிறான். ஆனால்
அவன் வருவதற்குள் பிரபாகர் வேறொரு பொம்மைக்குள் வெடிகுண்டைத் தயார் செய்கிறான். அதை
எடுத்துச் சென்று ஏர்ப்போர்ட்டில் இருக்கும் சோமசுந்தரத்திடம் கொடுப்பதற்காகப் புறப்படும்போது
பொம்மை வாங்கிவரச் சென்றவன் பொம்மையுடன் வர அவனையும் காரில் அழைத்துச் செல்கிறார்கள்.
அவர்கள் திட்டப்படி சோமசுந்தரத்திடம் பொம்மையை சேர்த்துவிட்டுப் புறப்படுகிறார்கள்.
இந்நிலையில்
மல்லிகா தப்பித்து போலீஸுடன் ஜெகதீஷ் மற்றும் அவன் ஆட்களைப் பின் தொடர, அதற்குள் அவர்கள்
கையில் இருந்த பழைய வெடிகுண்டு பொம்மை யாருக்கும் ஆபத்து இல்லாமல் சாலையில் வெடிக்கிறது.
அதுவரை, வெடிகுண்டு வைக்கப்பட்ட இங்கு வெடிக்குமா, அங்கு வெடிக்குமா என்று திகிலை எல்லா காட்சிகளிலும் கொடுத்திருப்பது திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
இறுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வேறு பொம்மையுடன் சிங்கப்பூர் போகவிருந்த சோமசுந்தரத்தை அவரைத் தேடி வந்த டாக்ஸி டிரைவர் தடுத்து நிறுத்துகிறான். அங்கு வந்த போலீஸ் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்ட பொம்மையை கைப்பற்றி அவரையும் நேரவிருந்த பேராபத்தை தடுக்கிறார்கள்.
இறுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வேறு பொம்மையுடன் சிங்கப்பூர் போகவிருந்த சோமசுந்தரத்தை அவரைத் தேடி வந்த டாக்ஸி டிரைவர் தடுத்து நிறுத்துகிறான். அங்கு வந்த போலீஸ் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்ட பொம்மையை கைப்பற்றி அவரையும் நேரவிருந்த பேராபத்தை தடுக்கிறார்கள்.
இந்தப் படத்தை
YOUTUBE-ல் காண CLICK பொம்மை FULL FILM
நடிகர்கள்
வீணை S. பாலசந்தர்
L.விஜயலஷ்மி
ரமேஷ்
V.S.ராகவன்
கோபாலகிருஷ்ணன்
தொழில்நுட்பக் கலைஞர்கள்
வசனம்-வே. லஷ்மணன்
ஒளிப்பதிவு-பிரகாஷ்
பாடல்கள்-வித்வான் லஷ்மணன்
படத்தொகுப்பு-K. கோவிந்தசாமி
கதை, இசை, தயாரிப்பு, இயக்கம்-வீணை S. பாலசந்தர்
Saturday, 16 February 2013
ANDHA NAAL
அந்த நாள் 1954-ம் ஆண்டு வீணை. S. பாலசந்தரின் (VEENAI S. BALACHANDER) இயக்கத்தின் வெளிவந்த ஒரு த்ரில்லர் படம். புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குநர் அகிரோ குரோசாவாவின் படைப்பான RASHOMON-ன் தாக்கத்தால் உருவான அந்த
நாள் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் தமிழ்ப்படம் ஆகும். இதன் கதை பல கோணங்களில் MULTIPLE PERSPECTIVE சொல்லப்பட்டிருக்கிறது.
1943, அக்டோபர் 11 அன்று இந்தியாவின் மதராஸப் பட்டினத்தின் மீது குண்டு வீசித் தாக்கியது. மறுநாள் திருவல்லிக்கேணியில்
வசித்து வரும் ரேடியோ இஞ்சினியரும் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சியருமான ராஜன் (SIVAJI GANESAN) தன் வீட்டில் தனது கைத்துப்பாக்கியாலேயே கொல்லப்பட்டிருப்பது கண்டறியப் படுகிறது. துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக் காரரான சின்னையாப் பிள்ளை போலீஸிடம் புகார் தருகிறார். இதை விசாரிக்க ரகசிய போலிஸான சிவானந்தத்துடன்(JAVAR SEETHARAMAN) போலீஸ் அதிகாரியான புருஷோத்தமன் நாயுடுவும் வருகிறார்கள். முதலில் யாரோ திருடன்தான் பணத்துக்காக இதை செய்திருப்பதாக சந்தேகப்பட, ஆனால் பணம் எதுவும் திருடு போகாததை உணர்ந்து, இதை செய்தது திருடன் இல்லை என்று முடிவெடுக்கிறார்கள். அதே நேரம் மறுநாள் மதராஸில் குண்டு போடப்படுவதை தெரிந்து கொண்டு இந்தியாவிலிருந்து வெளியேற ராஜன் திட்டமிட்டிருப்பது தெளிவாகிறது. ஆனால் ராஜனின் மனைவி உஷா (BANDARI BAI) எந்த விசாரணைக்கும் பதில் சொல்ல முடியாமல் துக்கத்தில் இருப்பதை அறிந்து செய்வதறியாது இருக்கிறார்கள்.
இதனால் ராஜனின் வீட்டைச் சுற்றி இருப்பவர்களிடம் விசாரணையை தொடர முடிவெடுக்கிறார்கள். முதலில் புகார் கொடுத்த சின்னையாப் பிள்ளையை விசாரிக்க, அவர் ராஜனின் குடும்பச் சொத்தில் தன் பங்கை ராஜனின் தம்பி பட்டாபி கேட்டதாகவும், ஆனால் பட்டாபி, அவர் மனைவி இருவரின் பொறுப்பில்லாத் தனத்தை உணர்ந்த ராஜன் அவன் பங்கை தர மறுத்ததாகவும் நடந்த சம்பவத்தை சொல்லி, பட்டாபிதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இதை சிவானந்தமும் நாயுடுவும் விசாரிக்கச் செல்லும் நேரத்தில் பட்டாபி தன் அண்ணன் இறப்பைத் தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்வதை அறிந்து அதிர்கின்றனர். மேலும் உயிருடன் இருந்த வரையில் தன் அண்ணனின் அருமை தெரியாமல் போனதை நினைத்து வருந்திய பட்டாபி, தன் மனைவி ஹேமா ஏற்கனவே ராஜனுடம் சொத்து விஷயமாக சண்டை போட்டிருப்பதை சொல்லி, அவள்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறான்.
முதலில் மறுத்த ஹேமா அவள் கணவனை கைது செய்து விடுவதாக விடுத்த மிரட்டலால் உண்மையை சொல்ல முன்வருகிறாள். அதே நேரம் ராஜனுக்கு அம்புஜம் என்ற நடனக்காரியுடன் தொடர்பு இருந்ததாகவும், அவள் கருவுற்றிருப்பதை ராஜனிடம் சொன்னபோது, ராஜன் அதற்கு அலட்சியமான பதில் சொன்ன சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், அந்தக் கோபத்தால் அம்புஜம்தான் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடும் என்று ஒரு தகவலைத் தருகிறாள்.
அம்புஜத்தை தேடிப் போகையில் அவள் ராஜனின் மரணத்தை அறிந்து அந்த ஊரை விட்டே போய் விட்ட செய்தியை அறிகிறார்கள். ஆனால் அம்புஜத்தின் வேலைக்காரனான சண்முகத்தின் உதவியால் அவளைத் தேடிப் பிடித்து விசாரிக்கிறார்கள். ஆனால் அவளோ ராஜனின் பக்கத்து வீட்டுக்காரரான சின்னையாப் பிள்ளை தனக்கு வளர்ப்புத் தந்தை என்றும் அவர்கள் பழகி வந்தது அவருக்குப் பிடிக்காததால் அவர்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறாள்.
யானையைத் தடவிப் பார்த்த குருடனின் கருத்துதான் இவர்கள் கருத்து என்று விளக்கமளித்த சிவானந்தம் ராஜனின் கேமராவில் இருந்த போட்டோக்களைப் பார்த்தும், ராஜனின் ஷூவில் இருந்த கைரேகை, கண்ணீர், உடைந்த வளையல் போன்றவற்றை வைத்து சந்தேகம் அடைந்து ராஜன் மற்றும் உஷாவின் கல்லூரி ரங்கநாதனை விசாரிக்கிறார். அவர் தந்த தகவலின் படி ராஜன் தன் ஆராய்ச்சிக்காக எதுவும் செய்யக்கூடிய மனநிலையில் இருந்ததாகவும், உஷா மிகவும் தேசபக்தி கொண்டவள் என்பதும் தெரிய வருகிறது.
இறுதியாக உஷாவை விசாரித்தபோது, உஷா தன் கல்லூரி நாட்களிலேயே ராஜன், ஒரு நாட்டின் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தனிமனித வளர்ச்சியும் முக்கியம் என்ற கருத்தைக் கொண்டவனாகவும், ஆனால் உஷாவோ நாட்டுக்காக வாழ்வையே அர்ப்பணிக்கத் தயார் என்ற கருத்தை உடையவளாகவும் இருந்தது தெரிகிறது. இதற்கிடையில் சிவானந்தம் உஷாவின் கைரேகைகளை அவளுக்குத் தெரியாமலே எடுக்கிறார்.
ஒரு மாலை நேரம் சிவானந்தம் கொலையாளிகள் என்று சந்தேகப்படும் அனைவரிடமும் பொய்த் தோட்டாகள் நிரப்பிய துப்பாக்கியைக் கொடுத்துத் தன்னை ராஜனாக நினைத்து சுடும்படி சொல்கிறார். எல்லோரும் தைரியமாகச் சுட, உஷாவால் சுட முடியாமல் தவிக்கிறாள். இறுதியில் பட்டாபியையும் ஹேமாவையும் கைது செய்யும்படி சிவானந்தம் சொல்ல, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் உஷா உண்மையை சொல்ல முன்வருகிறாள்.
இதில் ராஜனுக்கு ஜப்பான் ராணுவத்துடன் தொடர்பு இருந்ததும், அவன் தேசத்துக்கு துரோகம் செய்யும் வகையில் அவர்கள் இந்தியாவில் குண்டு வீசுவது தொடர்பாக ஜப்பானியரின் திட்டத்தில் முக்கிய நபராக இருப்பது உஷாவுக்குத் தெரிய வருகிறது. அவளுக்கு இருக்கும் தேசப்பற்றால் இதற்கு அனுமதிக்காத உஷா ராஜனை சுட முயற்சிக்கிறாள். பிறகு மனதை மாற்றிக் கொண்ட உஷா ராஜனின் பதற்றத்தால் எதிர்பாராமல் துப்பாக்கி வெடிக்க, ராஜன் இறக்கிறான். அந்த வருத்தத்தால் அவன் காலைக் கட்டிப் பிடித்துக் கண்ணீர் சிந்துகிறாள்.
சிவானந்தமும் நாயுடுவும் குண்டு வீச்சு தொடர்பான திட்டங்கள் அடங்கிய காகிதங்களைக் கேட்க, உஷா அதை எடுத்து வர உள்ளே போகிறாள். அந்த நேரத்தில் உஷாதான் கொலையாளி என்பதை கண்டுபிடித்த விதத்தை சொல்கிறார். உள்ளே சென்ற உஷா நீண்ட நேரமாக வராமல் இருக்க, அடுத்த நொடி உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. சிவானந்தமும் நாயுடுவும் உள்ளே ஓட, அவர்களுக்குப் பின்னால் இருந்த திரை மூடுகிறது.
நடிகர்கள்
சிவாஜி கணேசன் - ராஜன்
ஜாவர் சீதாராமன் - சிவானந்தம்
பண்டரி பாய் - உஷா
தொழில்நுட்பக் கலைஞர்கள்
வீணை S. பாலசந்தர் - இயக்குநர்
முக்தா V. ஸ்ரீநிவாசன் - உதவி இயக்குநர்
மாருதி ராவ் - ஒளிப்பதிவு
S. சூர்யா - படத்தொகுப்பு
இந்தப் படத்தை YOUTUBE-ல் காண click ANDHA NAALFriday, 15 February 2013
VEENAI S.BALACHANDER
![]() |
| VEENAI S. BALACHANDAR |
பிற்காலத்தில் சிறந்த வீணை இசைக் கலைஞரான இவர், 1934-ல் சீதாகல்யாணம் (SEETHA
KALYANAM) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
சில படங்களுக்கு இசையமைத்த இவர், 1954-ல் இருந்து இயக்குநராகத் தன் பணியைத் தொடர்ந்தார். "அந்த நாள்"(ANDHA NAAL) (இதன் திரைக்கதை புகழ் பெற்ற ஜப்பானியத் திரைப்படமான RASHOMON என்ற திரைப்படத்தை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது) பூலோக ரம்பை(BOOLOGA RAMBAI) அவன் அமரன்(AVAN AMARAN) போன்ற படங்களை இயக்கிய இவர், 1960-ல்
S.B கிரியேஷன்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலேயே தன் இசை, இயக்கத்தில் அவனா இவன்AVANA IVAN, பொம்மை (BOMMAI), நடு இரவில்(NADU IRAVIL) போன்ற படங்களை தயாரித்தார்.
இவரது வீணை இசையை S. BALACHANDAR VEENA, Aanandamrithakarshini: Veena S Balachander, S. Balachander - genius on veena - raag Hamsanandhi
தளங்களில் கேட்கலாம். இவரைப் பற்றிய ஆவணப் படங்கள் Veena S. Balachander Documentary: Part-1, மற்றும்
Veena S. Balachander Documentary: Part-2 போன்ற தளங்களில் காணலாம்.
Subscribe to:
Posts (Atom)

